< Back
பிற விளையாட்டு
ஏ டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணி 5-வது வெற்றி
பிற விளையாட்டு

'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: டி.ஜி.வைஷ்ணவா அணி 5-வது வெற்றி

தினத்தந்தி
|
21 Oct 2023 2:43 AM IST

‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் டி.ஜி.வைஷ்ணவா அணி 18-25, 25-16, 25-19, 25-12 என்ற செட் கணக்கில் சுங்கா இலாகாவை தோற்கடித்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய டி.ஜி.வைஷ்ணவா பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இது சுங்க இலாகா தொடர்ந்து சந்தித்த 6-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 25-18, 25-22, 26-24 என்ற நேர்செட்டில் ஐ.சி.எப்.பை வீழ்த்தி 4-வது வெற்றியை தனதாக்கியது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் தமிழ்நாடு போலீஸ்-சுங்க இலாகா (மாலை 4 மணி), இந்தியன் வங்கி-எஸ்.ஆர்.எம். (மாலை 6.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னதாக மாலை 6 மணியளவில் ஆசிய விளையாட்டு, ஆசிய பெண்கள் சீனியர் சாம்பியன்ஷிப், உலக பல்கலைக்கழக விளையாட்டு மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்