< Back
பிற விளையாட்டு
ஏ டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். முதலிடம்
பிற விளையாட்டு

'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். முதலிடம்

தினத்தந்தி
|
23 Oct 2023 3:29 AM IST

‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி முதலிடத்தை பிடித்து ரூ.1½ லட்சம் பரிசுத் தொகையை வசப்படுத்தியது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் கடைசி நாளான நேற்று நடந்த ஆட்டங்களில் ஐ.சி.எப் அணி 25-20, 17-25, 25-22, 28-26 என்ற செட் கணக்கில் வருமான வரியையும், ஐ.ஓ.பி. 25-15, 26-24, 24-26, 25-21 என்ற செட்டில் எஸ்.ஆர்.எம். அணியையும் வீழ்த்தியது. லீக் முடிவில் எஸ்.ஆர்.எம். மற்றும் இந்தியன் வங்கி அணிகள் தலா 5 வெற்றி, 2 தோல்வி என்று 15 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. செட் அடிப்படையில் எஸ்.ஆர்.எம். அணி முதலிடத்தை பிடித்து ரூ.1½ லட்சம் பரிசுத் தொகையை வசப்படுத்தியது.

இந்தியன் வங்கி 2-வது இடத்துடன் ரூ.1 லட்சத்தை பெற்றது. ஐ.ஓ.பி. அணி 3-வது இடத்தையும், டி.ஜி. வைஷ்ணவா 4-வது இடத்தையும் பிடித்தன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், ஓய்வு பெற்ற விமானநிலைய ஆணைய சேர்மன் மச்சேந்திரநாதன் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு கைப்பந்து சங்க வாழ்நாள் தலைவர் அர்ஜூன்துரை, எஸ் அண்ட் எஸ் பேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் பிரபு, மாவட்ட கைப்பந்து சங்க நிர்வாகிகள் ஆர்.வி.எம்.ஏ.ராஜன், ஜெகதீசன், பழனியப்பன், ஸ்ரீகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்