< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சென்னையில் நடைபெறும் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: வருமான வரி அணி வெற்றி
|14 Oct 2023 1:32 AM IST
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வருமான வரி அணி இந்தியன் வங்கியை வீழ்த்தியது.
சென்னை,
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் 5-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் டி.ஜி.வைஷ்ணவா அணி 25-22, 25-17, 25-19 என்ற நேர்செட்டில் ஐ.சி.எப்.பை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 25-21, 16-25, 32-20, 23-25, 15-11 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது.