< Back
பிற விளையாட்டு
98 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

98 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி - சென்னையில் நாளை தொடக்கம்

தினத்தந்தி
|
21 April 2024 3:42 AM IST

18-வது மாநில கூடைப்பந்து போட்டி நாளை முதல் 1-ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை,

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் அரைஸ் அறக்கட்டளை, காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், பி.ஆர்.டி. ஆதரவுடன் 18-வது மாநில கூடைப்பந்து போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 1-ந்தேதி வரை சென்னை தியாகராயநகர் வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப், இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., சத்யபாமா பல்கலைக்கழகம் உள்பட 72 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், ஜே.ஐ.டி., எத்திராஜ், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 26 அணிகளும் பங்கேற்கின்றன.

இதில் இருபாலரிலும் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.40 ஆயிரம், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரம், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று ரைசிங்ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்