< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
முட்டுகாடு படகு குழாமில் 37 நாட்டு செஸ் வீரர்கள் சுற்றுலா..!
|4 Aug 2022 10:46 PM IST
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 37 நாட்டு செஸ் வீரர்கள் முட்டுகாடு படகு குழாமில் சுற்றுலா பயணம் செய்தனர்.
சென்னை,
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 37 நாட்டு செஸ் வீரர்கள் முட்டுகாடு படகு குழாமில் சுற்றுலா பயணம் செய்தனர். ஒலிம்பியாட் போட்டியில் நேற்று வரை 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று செஸ் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செஸ் வீரர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆல்பணியா, ஆஸ்திரேலியா, டென்மார்க், இத்தாலி, மலேசியா, நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 37 நாடுகளிலிருந்து 110 செஸ் வீரர்கள் முட்டுகாடு போட் ஹவுஸுக்கு சுற்றுலா சென்றனர்.
அங்குள்ள விசை படகில் பயணித்து செல்ஃபி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.