< Back
பிற விளையாட்டு
2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தேதி அறிவிப்பு

கோப்புப்படம்

பிற விளையாட்டு

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
20 July 2022 6:30 AM IST

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ்ஏஞ்சல்ஸ்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு (2021) நடந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024-ம் ஆண்டு நடக்கிறது.

அதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த போட்டி நடைபெறும் தேதியை உள்ளூர் போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜூலை 14-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும், பாரா ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும் நடைபெறும் என்று முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 1932, 1984-ம் ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ளது.

மேலும் செய்திகள்