< Back
பிற விளையாட்டு
பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் நிது காங்ஹாஸ், பிரீத்தி, மஞ்சு வெற்றி
பிற விளையாட்டு

பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் நிது காங்ஹாஸ், பிரீத்தி, மஞ்சு வெற்றி

தினத்தந்தி
|
19 March 2023 2:43 AM IST

பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் நிது காங்ஹாஸ், பிரீத்தி, மஞ்சு வெற்றி பெற்றனர்.

13-வது பெண்கள் உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நிது காங்ஹாஸ், தென்கொரியாவின் டோயோன் காங்கை சந்தித்தார். இதில் நிதுவின் சரமாரியான குத்துகளை சமாளிக்க முடியாமல் டோயோன் காங் தடுமாறியதால் போட்டியை நிறுத்திய நடுவர் நிது வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி 4-3 என்ற கணக்கில் ருமேனியாவின் லாக்ராமியரா பெர்ஜோச்சை வீழ்த்தினார். இதேபோல் 66 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மஞ்சு பாம்போரியா 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தின் காரா வார்ராயை வென்றார்.

மேலும் செய்திகள்