< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்
|24 March 2023 2:37 AM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் கிடைத்துள்ளது.
போபால்,
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் வருண் தோமர்-ரிதம் சங்வான் இணை 11-17 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் வெய் கியான்-ஜினாவ் லிய் ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.
வருண் தோமர் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே அவர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.
இதேபோல் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் இந்தியாவின் ரித்ரான்ஷ் பட்டீல்-நர்மதா நிதின் ராஜூ ஜோடி 16-8 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் கியாங்கு ஜாங்-ஹனான் யு இணையை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.