< Back
ஹாக்கி
உலகக் கோப்பை ஆக்கி: வேல்சுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்ப்பு

Image Courtesy : @TheHockeyIndia twitter

ஹாக்கி

உலகக் கோப்பை ஆக்கி: வேல்சுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
19 Jan 2023 2:57 AM IST

இந்திய அணி தனது கடைசி லீக்கில் வேல்ஸ் அணியை இன்று சந்திக்கிறது.

ரூர்கேலா,

16 அணிகள் இடையிலான 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் நடந்து வருகிறது. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை தோற்கடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை கோல் இன்றி டிரா செய்தது.

இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் வேல்சை இன்று (வியாழக்கிழமை) சந்திக்கிறது. தங்களை விட தரவரிசையில் 9 இடங்கள் பின்தங்கி இருக்கும் வேல்சுக்கு எதிராக இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி கால்இறுதிக்கு நேரடியாக தகுதி பெற இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்று, இதே பிரிவில் இங்கிலாந்து-ஸ்பெயின் இடையிலான ஆட்டம் டிராவில் முடிய வேண்டியது அவசியமாகும். தசைப்பிடிப்பால் அவதிப்படும் முன்னணி வீரர் ஹர்திக் சிங் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மேலும் செய்திகள்