மகளிர் புரோ ஆக்கி லீக்; இந்திய அணிக்கு 2-வது தோல்வி
|இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவுக்கு எதிராக தோல்வியடைந்திருந்தது.
புவனேஸ்வர்,
மகளிருக்கான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரின் சில லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன.
இதில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவுக்கு எதிராக 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று பலம் வாய்ந்த நெதர்லாந்துடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தாலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் நெதர்லாந்து 3 கோல்கள் அடித்து இந்தியாவை வீழ்த்தியது. முடிவில் இந்திய அணி இந்த ஆட்டத்தில் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. நெதர்லாந்து தரப்பில் ஜான்சன் யிப்பி 2 கோல்களும், வன் டெர் எல்ஸ்ட் பே ஒரு கோலும் அடித்து அணி வெற்றி பெற உதவினர். இந்தியா தரப்பில் நவ்னீத் கவுர் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.