< Back
ஹாக்கி
மகளிர் புரோ ஆக்கி லீக்; இந்தியா -   அமெரிக்கா அணிகள் நாளை மோதல்

image courtesy; twitter/ @TheHockeyIndia

ஹாக்கி

மகளிர் புரோ ஆக்கி லீக்; இந்தியா - அமெரிக்கா அணிகள் நாளை மோதல்

தினத்தந்தி
|
8 Feb 2024 7:21 PM IST

இந்த தொடரில் இந்திய அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஸ்வர்,

மகளிருக்கான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரின் சில லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் இந்திய அணி, தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் சீனா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி கண்டுள்ளது.

இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத நிலையில், இந்திய அணி நாளை அமெரிக்காவுடன் மோத உள்ளது.

மேலும் செய்திகள்