< Back
ஹாக்கி
பெண்கள் ஆக்கி போட்டி: இந்தியா-ஸ்பெயின் இடையிலான ஆட்டம் டிரா
ஹாக்கி

பெண்கள் ஆக்கி போட்டி: இந்தியா-ஸ்பெயின் இடையிலான ஆட்டம் 'டிரா'

தினத்தந்தி
|
28 July 2023 1:59 AM IST

இந்தியா-ஸ்பெயின் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

மேட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் ஆக்கி தொடரில் இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயின்-இந்தியா அணிகள் மோதின.

இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணியில் நவ்னீத் கவுர் இரட்டை கோல் (14-வது மற்றும் 29-வது நிமிடம்) அடித்தார். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்