< Back
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: 4-வது வெற்றியை பதிவு செய்து அசத்திய இந்தியா

Image Courtacy: ANI

ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: 4-வது வெற்றியை பதிவு செய்து அசத்திய இந்தியா

தினத்தந்தி
|
1 Nov 2023 1:24 AM IST

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது.

ராஞ்சி,

பெண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஜப்பானை வீழ்த்தியது.

இந்திய அணியில், நவ்னீத் கவுர் (31-வது நிமிடம்) சங்கீதா குமாரி (47-வது நிமிடம்) கோல் போட்டனர். தொடர்ந்து 4-வது வெற்றியை சுவைத்த இந்திய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்திய அணி ஏற்கனவே அரைஇறுதியை எட்டிவிட்டநிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை நாளை சந்திக்க உள்ளது.

மேலும் செய்திகள்