< Back
டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: சபலென்கா, ரைபகினா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்...!
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: சபலென்கா, ரைபகினா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்...!

தினத்தந்தி
|
10 July 2023 12:08 PM IST

சபலென்கா இந்த ஆண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 15-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் 2-ம் நிலை வீராங்கனையான சபலென்கா வெற்றி பெற்று 4-வது சுற்றிற்கு முன்னேறி உள்ளார்.இவர் தன்னை எதிர்த்து ஆடிய அண்ணா பிளிங்கோவானை 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் விழ்த்தி 4-வது சுற்றிற்கு முன்னேறி உள்ளார்.

இந்த வெற்றியின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சபலென்காவின் வெற்றிப் பயணம் 15-1 என்ற கணக்கில் வீறுநடை போடுகிறது.இவர் 4-வது சுற்று ஆட்டத்தில் 22-ம் நிலை வீராங்கனையான எகடெரினா அலெக்ஸாண்ட்ரா உடன் மோத உள்ளார்.எகடெரினா அலெக்ஸாண்ட்ரா முதன் முறையாக 4-வது சுற்றிற்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரைபகினா பிரிட்டிஷ் வீராங்கனையான கேட்டி போல்டரை விழ்த்தி 4-வது சுற்றிற்கு முன்னேறி உள்ளார்.இந்த ஆட்டத்தில் ரைபகினாவை சமாளிக்க முடியாமல் கேட்டி போல்டர் 6-1,6-1 என்ற செட் கணக்கில் விழ்ந்தார்.

மற்ற ஆட்டங்களில் முறையே மேடிசன் கீஸ் மற்றும் ஒன்ஸ் ஜபீர் 4-வது சுற்றிற்கு முன்னேறி உள்ளனர்.

மேலும் செய்திகள்