< Back
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவை அடக்கி இந்திய அணி திரில் வெற்றி

கோப்புப்படம் 

ஹாக்கி

புரோ ஆக்கி லீக்கில் ஆஸ்திரேலியாவை அடக்கி இந்திய அணி 'திரில்' வெற்றி

தினத்தந்தி
|
13 March 2023 2:38 AM IST

6-வது லீக்கில் ஆடிய இந்திய அணி 5 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.

ரூர்கேலா,

9 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியஅணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

தொடக்கம் முதல் இறுதி வரை திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 'ஹாட்ரிக்' கோல் (13, 14, 55-வது நிமிடம்) அடித்தார். ஜக்ராஜ் சிங் (18-வது நிமிடம்), தமிழகத்தை சேர்ந்த செல்வம் கார்த்தி (26-வது நிமிடம்) ஆகிய இந்தியர்களும் கோல் போட்டனர்.

6-வது லீக்கில் ஆடிய இந்திய அணி 5 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அதே சமயம் 6-வது ஆட்டத்தில் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு இது 5-வது தோல்வியாகும். இந்தியா அடுத்து உலக சாம்பியன் ஜெர்மனியை இன்று மீண்டும் சந்திக்கிறது.

மேலும் செய்திகள்