< Back
ஹாக்கி
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி

கோப்புப்படம்

ஹாக்கி

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: இந்தியன் வங்கி அணி வெற்றி

தினத்தந்தி
|
21 March 2024 2:34 AM IST

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தியது.

இந்தியன் வங்கி அணியில் சோமன்னா 2 கோலும், சில்வர் ஸ்டாலின் ஒரு கோலும், தமிழ்நாடு போலீஸ் அணியில் சண்முகவேல், சுரேந்தர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை துவம்சம் செய்தது. ஜி.எஸ்.டி. அணியில் ஹசன் பாஷா, தமிழரசன், லட்சுமண் கரண் கோல் போட்டனர்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்திய உணவு கழகம்-தமிழ்நாடு தபால் துறை (பிற்பகல் 2 மணி), சென்னை மாநகர போலீஸ்-அடையார் யுனைடெட் கிளப் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்