< Back
ஹாக்கி
சூப்பர் டிவிசன் ஆக்கி: இந்தியன் வங்கி அணி 4-வது வெற்றி
ஹாக்கி

சூப்பர் டிவிசன் ஆக்கி: இந்தியன் வங்கி அணி 4-வது வெற்றி

தினத்தந்தி
|
20 July 2022 7:11 AM IST

சூப்பர் டிவிசன் ஆக்கி போட்டியில் இந்தியன் வங்கி அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.

சென்னை,

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே-வருமான வரி அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தெற்கு ரெயில்வே அணியில் சூர்யாவும், வருமான வரி அணியில் மகேந்திரனும் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை வீழ்த்தியது. இந்தியன் வங்கி அணியில் சோமன்னா 3 கோலும், அக்‌ஷய்குமார், ஸ்டாலின் அபிலாஷ் தலா ஒரு கோலும் அடித்தனர்.

ஸ்டேட் வங்கி தரப்பில் மாணிக்கவாசகன், சுதன் தலா ஒரு கோல் திருப்பினர். 5-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியன் வங்கி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய ஸ்டேட் வங்கி அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.

மேலும் செய்திகள்