< Back
ஹாக்கி
ஹாக்கி
சூப்பர் டிவிசன் ஆக்கி: ஐ.சி.எப் அணியிடம் எஸ்.டி.ஏ.டி. தோல்வி
|8 July 2022 3:51 AM IST
சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.
சென்னை,
சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஐ.ஓ.பி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜி.எஸ்.டி.மற்றும் மத்திய கலால் வரி அணியை தோற்கடித்தது. ஐ.ஓ.பி. அணியில் ஹர்மன்பிரீத் சிங், சுரேஷ் பாபு, நம்பி கணேஷ், வினோத் ராயர் ஆகியோர் கோல் அடித்தனர். மத்திய கலால் வரி அணியில் பிச்சைமணி, ஹசன் பாஷா தலா ஒரு கோல் திருப்பினர்.
மற்றொரு ஆட்டத்தில் ஐ.சி.எப். 1-0 என்ற கோல் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியை வீழ்த்தியது. ஐ.சி.எப். அணியில் சஞ்சய் சால்கோ வெற்றிக்கான கோலை அடித்தார்.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஏ.ஜி.அலுவலகம்-ஸ்டேட் வங்கி (பிற்பகல் 2 மணி), இந்திரா கிளப்-சென்னை துறைமுகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.