< Back
ஹாக்கி
சூப்பர் டிவிசன் ஆக்கி: ஸ்டேட் வங்கியை வீழ்த்தி ஏ.ஜி.அலுவலக அணி வெற்றி..!

கோப்புப்படம்

ஹாக்கி

சூப்பர் டிவிசன் ஆக்கி: ஸ்டேட் வங்கியை வீழ்த்தி ஏ.ஜி.அலுவலக அணி வெற்றி..!

தினத்தந்தி
|
9 July 2022 3:36 AM IST

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் 58-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி.அலுவலக அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது. ஏ.ஜி.அலுவலக அணியில் ரஞ்சித், சஞ்சய் தலா 2 கோலும், யுவராஜ் ஒரு கோலும் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் சென்னை துறைமுக அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை வென்றது. துறைமுக அணியில் ரதீஷ் பிரபு 3 கோலும், அன்புமணி, ஜெகநாதன் தலா ஒரு கோலும் போட்டனர்.

மேலும் செய்திகள்