< Back
ஹாக்கி
ஹாக்கி
சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: வருமான வரி, ஐ.சி.எப். அணிகள் வெற்றி
|18 March 2024 1:42 AM IST
நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி. அலுவலகம் அணி, வருமான வரியை எதிர்கொண்டது.
சென்னை,
சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி. அலுவலகம் அணி, வருமான வரியை எதிர்கொண்டது. திரில்லிங்கான இந்த மோதலில் வருமான வரி அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி. அலுவலகத்தை வீழ்த்தியது. வருமான வரி வீரர் கார்த்தி 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஐ.சி.எப். 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய உணவு கழகத்தை தோற்கடித்தது. ஐ.சி.எப். அணியில் பிரித்வி, ஷியாம்குமார், அஷ்வின் குஜூர் கோல் போட்டனர். இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் தமிழ்நாடு போலீஸ்- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (பிற்பகல் 2 மணி), ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி- அடையாறு யுனைடெட் கிளப் (மாலை 4 அணி) அணிகள் மோதுகின்றன.