ஸ்பெயின் ஆக்கி தொடர்: இந்திய ஆண்கள் அணிக்கு வெண்கலப்பதக்கம்
|நெதர்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.
பார்சிலோனா,
ஸ்பெயின் ஆக்கி சம்மேளனத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய 4 நாடுகள் கலந்து கொண்ட ஆண்கள் ஆக்கித் தொடர் ஸ்பெயினின் தெரசா நகரில் நடந்தது. இதில் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட இந்தியா 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் நேற்று நெதர்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், தில்பிரீத் சிங் கோல் போட்டனர்.
இந்திய ஆண்கள் அணி அடுத்ததாக வருகிற 3-ந்தேதி தொடங்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறது.
India ends the tournament on a high note, securing the Bronze medal in the 100th Anniversary Spanish Hockey Federation International Tournament 2023!
India 2-1 Netherlands #HockeyIndia #IndiaKaGame@CMO_Odisha @IndiaSports @FIH_Hockey @Media_SAI @sports_odisha pic.twitter.com/Z8FZtOo2Eo