< Back
ஹாக்கி
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் தென் கொரியா அணியுடன் மோதுகிறது இந்தியா

image courtesy: HI Media via ANI

image courtesy: HI Media via ANI

ஹாக்கி

ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் தென் கொரியா அணியுடன் மோதுகிறது இந்தியா

தினத்தந்தி
|
24 Jun 2023 8:30 PM GMT

13-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வருகிற டிசம்பர் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

13-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வருகிற டிசம்பர் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, மலேசியா அணிகளும், 'பி' பிரிவில் எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, தென்ஆப்பிரிக்கா அணிகளும், 'சி' பிரிவில் முன்னாள் சாம்பியன் இந்தியா, கனடா, தென்கொரியா, ஸ்பெயின் அணிகளும், 'டி' பிரிவில் பெல்ஜியம், நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும்.

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி கண்ட இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் டிசம்பர் 5-ந் தேதி தென்கொரியாவை சந்திக்கிறது. அடுத்த லீக் ஆட்டங்களில் 7-ந் தேதி ஸ்பெயினையும், 9-ந் தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது. போட்டி அட்டவணையுடன் அணிகளின் தரவரிசைப்பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது. அர்ஜென்டினா அணி முதலிடத்திலும், முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி 2-வது இடத்திலும் உள்ளன. நெதர்லாந்து 4-வது இடத்தையும், பெல்ஜியம் 5-வது இடத்தையும் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்