< Back
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு..!!

image courtesy; PTI

ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு..!!

தினத்தந்தி
|
14 Aug 2023 11:21 AM IST

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் பட்டம் வென்ற இந்திய அணிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மும்பை,

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆண்கள் ஆக்கி கோப்பைக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய ஆக்கி அணி கோப்பையை கையில் ஏந்திய வீடியோவை பதிவிட்டு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில்,'இந்திய ஆக்கிக்கு மற்றொரு பிரகாசமான தருணம்! ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணிக்கு பாராட்டுகள்!' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்