ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
|சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
சென்னை,
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஆக்கி கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1.10 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையை வெளிப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை.
கோப்பை வழங்கும் விழாவை சிறப்பித்த அனுராக் தாகூர் அவர்களுக்கு நன்றிகள். இந்திய அணியின் அற்புதமான வெற்றிக்கு ரூ.1.10 கோடி வெகுமதியாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.