< Back
ஹாக்கி
ஹாக்கி
சர்வதேச ஆக்கி சம்மேளனத்தில் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு பொறுப்பு
|29 March 2024 1:53 AM IST
சர்வதேச ஆக்கி சம்மேளனம், வீரர்களுக்கான கமிட்டியின் புதிய உறுப்பினர்களை அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச ஆக்கி சம்மேளனம், வீரர்களுக்கான கமிட்டியின் புதிய உறுப்பினர்களை அறிவித்துள்ளது. இதில் நியமிக்கப்பட்ட 9 உறுப்பினர்களில் இந்திய கோல் கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேசும் ஒருவர். இந்த கமிட்டியின் இணைத் தலைவர்களாக ஸ்ரீஜேஷ் மற்றும் சிலி ஆக்கி வீராங்கனை கமிலா கேரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆக்கி சம்மேளன கூட்டங்களில் வீரர்கள் தரப்பில் கலந்து கொண்டு வீரர்கள் நலன் மற்றும் ஆக்கி மேம்பாட்டு குறித்து பேசுவார்கள்.
இது குறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில் 'ஆக்கி சம்மேளனத்தின் வீரர்களின் கமிட்டியில் என்னை சேர்த்திருப்பது மிகப்பெரிய கவுரவமாகும். கமிட்டியின் இணைத்தலைவர் என்பது கூடுதல் பொறுப்பாகும். புதிய கமிட்டி உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்' என்றார்.