< Back
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா வெற்றி..!

image courtesy: HI Media via ANI

ஹாக்கி

புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா வெற்றி..!

தினத்தந்தி
|
12 Jun 2022 1:53 AM IST

இந்தியா-பெல்ஜியம் இடையிலான லீக் ஆட்டம் பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் நேற்றிரவு நடந்தது.

ஆன்ட்வெர்ப்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இந்தியா-பெல்ஜியம் இடையிலான ஒரு லீக் ஆட்டம் பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் நேற்றிரவு நடந்தது.

விறுவிறுப்பான இந்த மோதலில் ஒரு கட்டத்தில் பெல்ஜியம் 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை கண்டது. அதன் பிறகு இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங் 52-வது நிமிடத்திலும், ஜர்மன்பிரீத் சிங் 58-வது நிமிடத்திலும் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார். வழக்கமான நேரத்தில் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியா 5-4 என்ற கணக்கில் ஒலிம்பிக் சாம்பியனான பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்தது. 13-வது லீக்கில் ஆடிய இந்தியா 10 வெற்றி, 3 தோல்வி என்று 29 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பெல்ஜியம் 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நெதர்லாந்து 31 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா- பெல்ஜியம் அணிகள் இன்று மீண்டும் மோத உள்ளன.

இதன் பெண்கள் பிரிவில் பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

மேலும் செய்திகள்