< Back
ஹாக்கி
புரோ ஆக்கி லீக் தொடர்:  இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு

image courtesy: twitter/@TheHockeyIndia

ஹாக்கி

புரோ ஆக்கி லீக் தொடர்: இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
10 May 2024 1:34 AM IST

பெல்ஜியத்தில் நடைபெறும் புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய ஆண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

9 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதன் அடுத்த இரண்டு சுற்று ஆட்டங்கள் முறையே பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் வருகிற 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜூன் 1-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையும் நடக்கிறது. இதில் இந்திய ஆண்கள் அணி, அர்ஜென்டினா, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துடன் தலா 2 முறை மோதுகிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வருகிற 22-ந் தேதி சந்திக்கிறது.

இந்நிலையில் பெல்ஜியத்தில் நடைபெறும் புரோ லீக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடருகிறார். ஹர்திக் சிங் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஆக்கி அணி வருமாறு:-

இந்திய அணி விவரம் பின்வருமாறு:- ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், சுமித், சஞ்சய், ஜூக்ராஜ் சிங், விஷ்ணுகாந்த் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா, மன்பிரீத் சிங், ஷாம்ஷெர் சிங், ஹர்திக் சிங், ராஜ்குமார் பால், முகமது ரஹீல் முசீன், மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய், குர்ஜந்த் சிங், ஆகாஷ்தீப் சிங், அரைஜீத் சிங் ஹூன்டல், பாபி சிங் தமி.

மேலும் செய்திகள்