< Back
ஹாக்கி
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்; இந்திய மகளிர் அணி 5-வது தோல்வி
|15 Feb 2024 9:01 AM GMT
இந்திய அணி நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதியது.
ரூர்கேலா,
5-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் 5 ஆட்டங்களில் சீனா (2முறை), நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியும், அமெரிக்காவுக்கு எதிராக வெற்றியும் கண்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' அணியான ஒலிம்பிக் சாம்பியன் நெதர்லாந்துடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. நடப்பு தொடரில் இந்தியாவின் 5-வது தோல்வி இதுவாகும். இந்த தொடரில் இந்திய அணி நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.