< Back
ஹாக்கி
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்; அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்ட இந்திய பெண்கள் அணி
|27 May 2024 2:00 PM IST
நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
ஆன்ட்வெர்ப்,
பெண்களுக்கான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட அர்ஜென்டினா அணி ஆட்டத்தில் முதல் பாதியின் முதல் நிமிடத்திலேயே கோல் அடித்து அசத்தியது. இதையடுத்து 3வது மற்றும் 4வது பாதியில் அர்ஜென்டினா அணி தலா ஒரு கோல் அடித்தது.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் 0-3 என இந்திய அணி அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்டது. அர்ஜென்டினா தரப்பில் டி சாண்டோ செலினா, கேம்பாய் மரியா, கிரானாட்டோ மரியா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.