< Back
ஹாக்கி
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்; அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி
|19 Feb 2024 6:05 PM IST
இது இந்த தொடரில் இந்திய அணி பெற்ற 3-வது வெற்றியாகும்.
ரூர்கேலா,
5-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 தோல்விகள் மற்றும் 2 வெற்றிகள் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி, தனது 8-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூட் அவுட் முறை நடத்தப்பட்டது. அதில் இந்தியா தனக்கு கிடைத்த 2 வாய்ப்புகளையும் கோலாக மாற்றியது. ஆனால் அமெரிக்கா ஒரு வாய்ப்பை மட்டுமே கோலாக்கியது. சூட் அவுட் முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இந்த தொடரில் 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.