< Back
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்: இந்திய பெண்கள் அணி தோல்வி

Image Courtesy: @TheHockeyIndia

ஹாக்கி

புரோ ஆக்கி லீக்: இந்திய பெண்கள் அணி தோல்வி

தினத்தந்தி
|
9 Jun 2024 8:42 AM IST

இந்தியா தனது கடைசி லீக்கில் இங்கிலாந்தை இன்று சந்திக்கிறது.

லண்டன்,

பெண்களுக்கான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் லண்டனில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா 2-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றது.

சுனெலிதா, தீபிகா ஆகியோர் அடித்த கோலால் ஒரு கட்டத்தில் 2-0 என்று முன்னிலை வகித்த இந்தியா அதன் பிறகு கோல்களை வாங்கி வெற்றியை கோட்டை விட்டது.

நடப்பு தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். இந்தியா தனது கடைசி லீக்கில் இங்கிலாந்தை இன்று சந்திக்கிறது.

மேலும் செய்திகள்