< Back
ஹாக்கி
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்: பெல்ஜியத்திடம் இந்திய அணி மீண்டும் தோல்வி
|26 May 2024 11:10 AM IST
9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
ஆன்ட்வெர்ப்,
9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வெர்ப் நகரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் பெல்ஜியத்துடன் மோதியது. இதில் முந்தைய ஆட்டத்தின் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி விளையாடியது. இருப்பினும் வழக்கமான ஆட்ட நேர முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதனையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பெல்ஜியம் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.