< Back
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வி

image courtesy; twitter/@TheHockeyIndia

ஹாக்கி

புரோ ஆக்கி லீக்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோல்வி

தினத்தந்தி
|
16 Feb 2024 5:37 PM IST

இந்தியா, தனது 4-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று மோத உள்ளது.

புவனேஸ்வர்,

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா உடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் அடிப்பதில் தீவிரம் காட்டின. இதனால் இந்த ஆட்டத்தில் வீரர்கள் அடிக்கடி கோல் எல்லையை முற்றுகையிட்டனர். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்து முன்னிலை பெற்ற வண்ணம் இருந்தன.

இருப்பினும் இந்த ஆட்டத்தில் இந்தியா 4-6 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இந்தியா தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும், சுக்ஜீத் சிங் மற்றும் மந்தீப் சிங் தலா 1 கோலும் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கோவர்ஸ் பிளேக் 2 கோல்களும், சலேஸ்கி ஆரன், சார்ப் லச்சிலன், ஆண்டர்சன் ஜேக்கப் மற்றும் வெல்ச் ஜேக் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

இதனையடுத்து இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் இன்று மோத உள்ளது.

மேலும் செய்திகள்