< Back
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்; ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Image Courtesy: Twitter / @India_AllSports

ஹாக்கி

புரோ ஆக்கி லீக்; ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

தினத்தந்தி
|
10 Feb 2024 9:30 PM IST

புரோ ஆக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இன்று தொடங்கியது.

புவனேஷ்வர்,

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இன்று தொடங்கியது. இதில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இன்று தனது தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் இன்று மோதியது.

இதில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தியது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோலும், ஜுக்ராஜ் சிங், லலித் குமார் உபாத்யாய் ஆகியோர் தலா 1 கோலும் அடித்து அசத்தினர்.

மேலும் செய்திகள்