< Back
ஹாக்கி
புரோ ஆக்கி லீக்: பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி

image courtesy; twitter/@TheHockeyIndia

ஹாக்கி

புரோ ஆக்கி லீக்: பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி

தினத்தந்தி
|
21 Feb 2024 9:18 AM IST

இந்தியா - ஸ்பெயின் இடையிலான ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

புவனேஸ்வர்,

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளும், ஒரு தோல்வியும் கண்டிருந்தது.

இந்நிலையில் இந்திய அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதியது. வழக்கமான நேர முடிவில் இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனதைத் தொடர்ந்து, ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு நகர்ந்தது.

இதில் 7-7 என்று வரை சமநிலை நீடித்தது. 8-வது வாய்ப்பை இந்திய வீரர் லலித்குமார் உபத்யாய் கோலாக்க, எதிரணியின் வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தி அசத்தினார். முடிவில் இந்தியா 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நெதர்லாந்துடன் இன்று மோதுகிறது.

மேலும் செய்திகள்