புரோ ஆக்கி லீக்: அயர்லாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற இந்தியா
|இதில் இந்திய அணி விளையாடிய முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளும், ஒரு தோல்வியும் கண்டிருந்தது.
புவனேஸ்வர்,
9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளும், ஒரு தோல்வியும் கண்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் நேற்று மோதியது. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. இதில் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் கோல் அடிக்க இரு அணிகளும் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த வண்ணம் இருந்தன. ஆனால் இந்திய அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. இதன் மூலம் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி வீரர் குர்ஜந்த் சிங் 60-வது நிமிடத்தில் அந்த வெற்றிக்குரிய கோலை அடித்தார்.