< Back
ஹாக்கி
ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று: அரையிறுதியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் இன்று மோதல்..!

image courtesy; twitter/ @TheHockeyIndia

ஹாக்கி

ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று: அரையிறுதியில் இந்தியா - ஜெர்மனி அணிகள் இன்று மோதல்..!

தினத்தந்தி
|
18 Jan 2024 6:39 AM IST

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

ராஞ்சி,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் ஆக்கி தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஜெர்மனி, ஜப்பான் (ஏ பிரிவு), அமெரிக்கா, இந்தியா (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதி வாய்ப்பை இழந்த நியூசிலாந்து, செக்குடியரசு, சிலி, இத்தாலி அணிகள் 5 முதல் 8 இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் விளையாடுகின்றன.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ள 2-வது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி ஜெர்மனியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வி கண்ட இந்தியா அடுத்த ஆட்டங்களில் நியூசிலாந்து மற்றும் இத்தாலி அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விடலாம் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிக்கும் மற்றொரு வாய்ப்பு உள்ளது. அதாவது அடுத்து நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறமுடியும். முன்னதாக நடைபெறும் முதலாவது அரையிறுதியில் அமெரிக்கா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.


மேலும் செய்திகள்