< Back
ஹாக்கி
ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி; இந்திய பெண்கள் ஆக்கி அணியின் துணை கேப்டன் வந்தனா விலகல்..!
ஹாக்கி

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி; இந்திய பெண்கள் ஆக்கி அணியின் துணை கேப்டன் வந்தனா விலகல்..!

தினத்தந்தி
|
4 Jan 2024 5:59 AM IST

பாரீஸ் ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி போட்டிக்கான ஒரு தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.

ராஞ்சி,

பாரீஸ் ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி போட்டிக்கான ஒரு தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வருகிற 13-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக்குடியரசு அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, இத்தாலி, அமெரிக்கா, நியூசிலாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்திய அணி தனது முதலாவது லீக்கில் 13-ந் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியில் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக இந்திய பெண்கள் ஆக்கி அணியின் துணை கேப்டனும், முன்கள வீராங்கனையுமான வந்தனா கட்டாரியாவுக்கு பயிற்சியின் போது எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.

அனுபவம் வாய்ந்த அவரது விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக இளம் வீராங்கனை பல்ஜீத் கவுர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்த நிக்கி பிரதான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்