< Back
ஹாக்கி
தேசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் - சென்னையில் இன்று தொடக்கம்
ஹாக்கி

தேசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் - சென்னையில் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
17 Nov 2023 8:23 AM IST

தொடக்க நாளான இன்று தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் அசாம் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை,

13-வது தேசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் ஆக்கி போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த தொடரில் மொத்தம் 8 பிரிவுகளாக 28 அணிகள் கலந்து கொள்ளும் நிலையில், வரும் 28-ந்தேதி வரை போட்டிகள் நடக்கின்றன. தொடக்க நாளான இன்று தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் அசாம் அணியை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்