< Back
ஹாக்கி
அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி 2-வது வெற்றி
ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி 2-வது வெற்றி

தினத்தந்தி
|
30 Aug 2023 1:29 AM IST

நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவ அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய தணிக்கை துறை அலுவலகத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவ அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய தணிக்கை துறை அலுவலகத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. ராணுவ அணியில் சுமீத்பால் சிங் (34, 39, 53-வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல் அடித்து அசத்தினார். தணிக்கை துறை அலுவலக அணி தரப்பில் விஷால் சிங் (24-வது நிமிடம்), அப்ஹரன் சுதேவ் (51-வது நிமிடம்) கோல் போட்டனர். மற்றொரு ஆட்டத்தில் மத்திய தலைமைச் செயலக அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. தலைமைச் செயலக அணியில் தரம்பிர் யாதவ் (51-வது நிமிடம்), அனிகெட் பாலாசாகிப் (58-வது நிமிடம்) தலா ஒரு கோலும், கடற்படை அணியில் பர்தீக் சிங் (24-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர். 3-வது தோல்வியை சந்தித்த கடற்படை அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.

இன்றைய லீக் ஆட்டங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கி-தமிழ்நாடு (பிற்பகல் 2.30 மணி), இந்திய கடற்படை-கர்நாடகா (மாலை 4.15 மணி), இந்தியன் ஆயில்-இந்தியன் ரெயில்வே (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்