< Back
ஹாக்கி
ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி
ஹாக்கி

ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: 'சாம்பியன்' பட்டம் வென்றது ஜெர்மனி

தினத்தந்தி
|
17 Dec 2023 7:03 AM IST

ஜெர்மனி அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

கோலாலம்பூர்,

16 அணிகள் பங்கேற்ற 13-வது ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனி-பிரான்ஸ் அணிகள் சந்தித்தன.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி லீக்கில் கண்ட தோல்விக்கு பழிதீர்த்ததுடன் 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. பிரான்ஸ் அணி தரப்பில் வெரிர் ஜூலெஸ் 17-வது நிமிடத்தில் கோலடித்தார். ஜெர்மனி அணியில் கோர்டெஸ் ஜான் (32-வது நிமிடம்), ஹோல்டெர்மான் லியாம் (40-வது நிமிடம்) தலா ஒரு கோல் போட்டனர்.

மேலும் செய்திகள்