< Back
ஹாக்கி
ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஆக்கி;  இந்திய அணி தென்கொரியாவுடன் இன்று மோதல்!

image courtesy; twitter/ @TheHockeyIndia

ஹாக்கி

ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஆக்கி; இந்திய அணி தென்கொரியாவுடன் இன்று மோதல்!

தினத்தந்தி
|
5 Dec 2023 1:26 PM IST

இந்திய அணி 'சி' பிரிவில் ஸ்பெயின், கனடா, தென்கொரியா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

கோலாலம்பூர்,

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று தொடங்கி வரும் 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய அணி 'சி' பிரிவில் ஸ்பெயின், கனடா, தென்கொரியா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தென்கொரிய அணியுடன் இன்று மோத உள்ளது.

தொடக்க நாளான இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ்-எகிப்து, ஜெர்மனி-தென்ஆப்பிரிக்கா, ஸ்பெயின்-கனடா, அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா, மலேசியா-சிலி அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்