< Back
ஹாக்கி
ஹாக்கி
சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு விருதுகள்: சிறந்த கோல் கீப்பர்களாக ஸ்ரீஜேஷ், சவிதா புனியா தேர்வு
|5 Oct 2022 11:47 PM IST
சிறந்த கோல் கீப்பருக்கான விருதில் ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவிலும் இந்தியா சாதித்துள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது. சர்வதேச அளவில் வழங்கப்படும் இந்த விருதுக்கு பல நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.
இதில் இந்திய மகளிர் சீனியர் ஆக்கி அணியின் வீராங்கனை மும்தாஜ் கான் 2021-22-க்கான வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை நேற்று தட்டி சென்றார். இந்த நிலையில் சிறந்த கோல் கீப்பர் விருது இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவிலும் இந்தியா சாதித்துள்ளது. ஆடவர் பிரிவில் சிறந்த கோல் கீப்பருக்கான விருது ஸ்ரீஜேஷ்-க்கும் மற்றும் மகளிர் பிரிவில் சிறந்த கோல் கீப்பருக்கான விருது இந்திய ஆக்கி அணியின் கேப்டன் சவிதா புனியாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.