< Back
ஹாக்கி
இந்திய மகளிர் ஹாக்கி அணி மே-18ல் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்

கோப்புப்படம் 

ஹாக்கி

இந்திய மகளிர் ஹாக்கி அணி மே-18ல் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்

தினத்தந்தி
|
27 April 2023 12:09 PM IST

இந்திய மகளிர் ஹாக்கி அணிஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

புதுடெல்லி,

இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணம் மே 18 ஆம் தேதி தொடங்கி மே 27 ஆம் தேதி நிறைவடையும்.

தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் ஆஸ்திரேலிய தேசிய அணியுடன் இந்தியா விளையாடும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடும். அனைத்து போட்டிகளும் அடிலெய்டில் உள்ள மேட் மைதானத்தில் நடைபெறும்.

இந்த சுற்றுப்பயணம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஹாங்சோவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சியாக அமையும்.

இந்த தொடர் குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் ஜன்னெகே ஸ்கோப்மேன் கூறும்போது: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பெண்களுக்கான ஹாக்கியில் நாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை மதிப்பிட உதவும்.

மிக முக்கியமாக, சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தத் தொடர் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் இது எங்கள் அணியின் செயல்பாட்டையும், அதில் மாற்றங்களை செய்வதற்கும் முக்கியமானதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்