பெண்கள் ஆக்கி: ஜெர்மனி அணியிடம் இந்தியா மீண்டும் தோல்வி
|ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ரசல்ஷீம்,
ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஜெர்மனியில் உள்ள ரசல்ஷீம் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்தியா-ஜெர்மனி அணிகள் மீண்டும் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனைகள் நிக் லோரென்ஸ் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 52-வது நிமிடத்திலும், சார்லோட் ஸ்டாபென்ஹோர்ட்ஸ் 54-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கடைசி வரை போராடியும் இந்திய அணியால் பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.
முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடமும், முதலாவது ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோற்று இருந்தது.
ஜெர்மனி பயணத்தில் சோபிக்காத இந்திய அணி அடுத்து ஸ்பெயின் சென்று அங்கு நடைபெறும் 4 நாடுகள் ஆக்கி போட்டியில் ஆடுகிறது.