< Back
ஹாக்கி
ஸ்பெயின் தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு!

image courtesy; twitter/ @TheHockeyIndia

ஹாக்கி

ஸ்பெயின் தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு!

தினத்தந்தி
|
8 Dec 2023 9:24 PM IST

இந்த தொடருக்கான இந்திய அணிக்கு சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய பெண்கள் ஆக்கி அணி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 நாடுகளுக்கு இடையேயான தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஸ்பெயின், ஜெர்மனி, அயர்லாந்து, பெல்ஜியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் வரும் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய ஆக்கி கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

22 வீரர்கள் கொண்ட இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

சவிதா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம், நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி, குர்ஜித் கவுர், அக்ஷதா அபாசோ தேகலே, நிஷா, வைஷ்ணவி விட்டல் பால்கே, மோனிகா, சலிமா டெடே, நேஹா, நவ்நீத் கவுர், ஜோதி, பல்ஜீத் கவுர், நவ்நீத் கௌர்தி, ஜோதி சாத்ரி, சங்கீதா குமாரி, தீபிகா, வந்தனா கதரியா, பியூட்டி டன்டுங், ஷர்மிளா தேவி.

மேலும் செய்திகள்