தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு....!
|இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய ஆக்கி அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 நாடுகள் இடையிலான தொடரில் விளையாட உள்ளது. அதன்படி வரும் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ள இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான 26 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக கடந்த ஆண்டில் சிறந்த வீரர் விருது வென்ற ஹர்டிக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம் பின்வருமாறு;-
கோல் கீப்பர்கள்; ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன், கிருஷன் பகதூர் பதாக், பவன்.
பின்கள வீரர்கள்; ஜர்மன்பிரீத் சிங், ஜுக்ராஜ் சிங், அமித் ரோகிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருன் குமா, சுமித், சஞ்சய், ரபிச்சந்திர சிங்.
நடுகள வீரர்கள்; விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா, ராஜ்குமார் பால், ஷம்ஷிர் சிங், விஷ்னுகாந்த் சிங், ஹர்டிக் சிங் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங்.
முன்கள வீரர்கள்; மந்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், குர்ஜன்ந் சிங், லலித் குமார், ஆகாஷ்தீப் சிங், அரைஜீத் சிங், பாபிசிங் தாமி.