< Back
ஹாக்கி
இந்திய ஆக்கி விருதுகள் 2023: சிறந்த வீரராக ஹர்திக் சிங் தேர்வு

image courtesy: twitter/@TheHockeyIndia

ஹாக்கி

இந்திய ஆக்கி விருதுகள் 2023: சிறந்த வீரராக ஹர்திக் சிங் தேர்வு

தினத்தந்தி
|
2 April 2024 1:35 AM IST

இந்திய ஆக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.

புதுடெல்லி,

இந்திய ஆக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர். அதன்படி, புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2023-ம் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்திய ஆக்கி கூட்டமைப்பு சார்பாக 2023-ம் ஆண்டுக்கான சிறந்த வீரராக ஹர்திக் சிங் தேர்ந்தெடுக்கப்படுக்கப்பட்டார். அவருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் சிறந்த கோல் கீப்பராக சவிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் விருதும் வழங்கப்பட்டது.

2024 ராஞ்சில் நடந்த ஒலிம்பிக் ஆக்கி தகுதிச்சுற்றில், தொடருக்கான சிறந்த இளம் வீரர் விருதை வென்ற "தீபிகா"-வுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

2022- 2023 எப்.ஐ.எச். ஆக்கி லீக்கில் அதிக கோலடித்த "ஹர்மன்ப்ரீத் சிங்"-க்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் தொடர் நாயகன் விருது வென்ற "மந்தீப் சிங்"-க்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ராஞ்சியில் நடந்த பெண்கள் ஆசிய கோப்பைக்கான போட்டியில் தொடர் நாயகி விருது வென்ற "சலீமா"-க்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அதே தொடரில் ரைசிங் வீராங்கனை விருதை வென்ற "சங்கீதா குமாரி"-க்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பல வீரர், வீராங்கனைகளுக்கும் விருதுகளும், காசோலையும் வழங்கப்பட்டன. சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கரவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் இந்திய ஆக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்