< Back
ஹாக்கி
எப்.ஐ.எச் நேஷன்ஸ் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருக்கிறோம்- கேப்டன் சவிதா

Image Courtesy: Hockey India 

ஹாக்கி

எப்.ஐ.எச் நேஷன்ஸ் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருக்கிறோம்- கேப்டன் சவிதா

தினத்தந்தி
|
13 Nov 2022 7:33 PM IST

எப்.ஐ.எச் நேஷன்ஸ் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருப்பதாக இந்திய அணியின் சவிதா புனியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மகளிர் எப்.ஐ.எச் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் ஸ்பெயினில் உள்ள வலென்சியாவில் டிசம்பர் 11 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி, கனடா, ஜப்பான் மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ஏ பிரிவில் அயர்லாந்து, இத்தாலி, கொரியா மற்றும் ஸ்பெயின் அணிகள் உள்ளன. இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அணியை கோல்கீப்பர் சவிதா புனியா வழிநடத்துகிறார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காத இந்தியாவின் மிட்பீல்டர் நவ்ஜோத் கவுர் அணிக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மகளிர் எப்.ஐ.எச் நேஷன்ஸ் கோப்பையை வெல்வதில் உறுதியாக இருப்பதாக கேப்டன் சவிதா புனியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், " எப்.ஐ.எச் நேஷன்ஸ் தொடருக்கான பயிற்சி முகாமில் எங்கள் அணி மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. இந்த தொடரை வெல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கோப்பையை வெல்வதன் மூலம் நாங்கள் எப்.ஐ.எச் ஆக்கி மகளிர் புரோ லீக்கின் அடுத்த சீசனில் (2023-2024) பங்கேற்க முடியும்.

எப்.ஐ.எச் மகளிர் புரோ லீக்கின் கடைசி சீசனில் விளையாடியது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இதனால் அடுத்த சீசனிலும் விளையாட விரும்புகிறோம். இது ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு நாங்கள் தயாராவதற்கு உதவும்" என்றார்.

நேஷன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய வீராங்கனைகள் பெயர் பின்வருமாறு:-

கோல்கீப்பர்கள்: சவிதா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம்

டிபெண்டர்கள்: கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி.

மிட்பீல்டர்கள்: நிஷா, சலிமா டெடே, சுஷிலா சானு, மோனிகா, நேஹா, சோனிகா, ஜோதி, நவ்ஜோத் கவுர்.

முன்கள வீரர்கள்: வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்நீத் கவுர், சங்கீதா குமாரி, பியூட்டி டங்டங்.

மேலும் செய்திகள்