< Back
ஹாக்கி
பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா

Image Courtacy: ANI

ஹாக்கி

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா

தினத்தந்தி
|
31 Oct 2023 12:55 AM IST

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி போட்டியில் சீனாவை 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.

ராஞ்சி,

பெண்களுக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் நேற்றிரவு நடந்த லீக் போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான சீனாவை தோற்கடித்து அரைஇறுதியை எட்டியது. இந்திய அணியின் சார்பில் தீபிகா, சலிமா ஆகியோர் ஒரு கோல் அடித்து அசத்தினர்.

இது இந்தியாவுக்கு இது 'ஹாட்ரிக்' வெற்றியாகும். ஏற்கனவே தாய்லாந்து, மலேசியாவை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்